Wednesday, April 22, 2009

திருமாவளவன் வேட்புமனுத் தாக்கல் !


திருமாவளவன் வேட்புமனுத் தாக்கல் !
அரியலூர்
விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.திமுக தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றுள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, சிதம்பரம் மற்றும் விழுப்புரம் ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிடுகிறது.சிதம்பரம் தொகுதியில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் போட்டியிடும் கட்சியின் தலைவர் திருமாவளவன் இன்று காலை 11 மணியளவில் அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.அவருடன், அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம், சட்டமன்ற உறுப்பினர் ரவிக்குமார், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் முன்னணி நிர்வாகிகள், தி.மு.க நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உள்பட பலர் வந்திருந்தனர்.முன்னதாக, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகேயுள்ள அம்பேத்கர் சிலைக்கு திருமாவளவன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.பின்னர் செய்தியாளர்களிடம் திருமாவளவன் கூறுகையில், "ஈழத் தமிழர்கள் மீது பா.ம.க. நிறுவனர் ராமதாசுக்கு உண்மையிலேயே அக்கறை இருந்தால், நாடாளுமன்றத்தில் ஈழத்தமிழர் பிரச்சனையை பேசுவதற்கு சரியான நபர் பொன்னுசாமியா அல்லது திருமாவளவனா என்பதை யோசிக்க வேண்டும் என்று தமிழறிஞர்கள் விரும்புகின்றனர்" என்றார்.ஈழத்தமிழர் பிரச்சனைக்காக, திமுக தலைவர் கருணாநிதி அறிவித்துள்ள முழுஅடைப்புக்கு கட்சி வேறுபாடின்றி அனைத்து தரப்பினரும் ஓத்துழைப்பு தரவேண்டும் என்று கேட்டுக்கொண்ட அவர், ஈழத் தமிழர் பிரச்சனைக்காக நாளை தேர்தல் பிரச்சாரம் எதிலும் தான் கலந்து கொள்ளவில்லை என்றும் தெரிவித்தார்.

Tuesday, April 21, 2009

மூன்று லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் - திருமா

மூன்று லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் - திருமா
சிதம்பரம்: இலங்கைத் தமிழர் பிரச்னையில் நேர் எதிரான கொள்கையுடைய ஜெயலலிதாவுடன் ராமதாஸ் சேர்ந்ததுதான் தவறான கூட்டணி என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார்.சிதம்பரத்தில் திமுக கூட்டணிக் கட்சிகளின் செயல் வீரர்கள் கூட்டத்தில் அவர் பேசுகையில்,ஈழத் தமிழர்கள் மீது ராமதாசுக்கு உண்மையான அக்கறை இருந்திருந்தால் மதிமுகவை அழைத்துக் கொண்டு திமுக அணிக்கு வந்திருக்கலாம். ஆனால் அவர் எடுத்த முடிவு தவறானது.முரண்பாடான கருத்துடைய காங்கிரஸ் கட்சி கூட ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான மனிதச் சங்கிலி போராட்டத்தில் பங்கேற்றது. போரை நிறுத்தக் கோரி சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்தபோது ஆதரவளித்தது.ஆனால் இலங்கைப் பிரச்னையில் நேர் எதிரான கொள்கையுடைய ஜெயலலிதாவுடன் பாமக கூட்டணி சேர்ந்தது தவறு. "கொலைக் குற்றவாளி பிரபாகரன் என்றும், அவரைப் பிடித்து இந்தியாவிற்கு கொண்டு வந்து தண்டிக்க வேண்டும்'' என்றும் கூறியவர் ஜெயலலிதா.இதை ராஜபட்சவும் சோனியா காந்தியும் கூட சொன்னதில்லை. அதிமுகவுடன் 2006ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் ஏற்பட்ட கசப்பான அனுபவம், பிரபாகரனை கைது செய்து இந்தியாவுக்கு கொண்டு வந்து தண்டிக்க வேண்டும் என்று ஜெயலலிதா கூறியது ஆகிய இரண்டு காரணங்களால்தான் அதிமுகவுடன் நான் கூட்டணி சேரவில்லை.கடலூர் மாவட்டத்தில் அதிமுகவுக்கு வாக்கு வங்கியே கிடையாது. 1990ல் சிதம்பரம் மக்களவைத் தேர்தலில் பாமக தனித்து போட்டியிட்டபோது 1 லட்சம் வாக்குகள்தான் பெற்றது. இத்தனைக்கும் இந்தத் தொகுதியில் 3.5 லட்சம் வன்னியர் வாக்குகள் உள்ளன.அடுத்து 1999, 2004 தேர்தலில் கூட்டணிக் கட்சியான திமுகவின் ஆதரவுடன்தான் பாமக வென்றது. 1999ல் மூப்பனாரால் அறிமுகப்படுத்தப்பட்ட நான், இந்தத் தொகுதியில் இரண்டே கால் லட்சம் வாக்குகள் பெற்றேன்.2004ல் தனித்துப் போட்டியிட்டு 2.57 லட்சம் வாக்குகள் பெற்று 2ம் இடத்தைப் பிடித்தேன். அப்போது அதிமுக மூன்றாவது இடத்துக்குத் தள்ளப்பட்டு டெபாசிட் இழந்தது.தற்போது மிகப்பெரிய வாக்கு வங்கியுள்ள திமுக ஆதரவுடன் சுமார் 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்றார் திருமாவளவன்.

தொல்.திருமாவளவன் வேட்பு மனுதாக்கல் எப்போது ?

தொல்.திருமாவளவன் வேட்பு மனுதாக்கல் எப்போது ?

வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் அவர்கள் போட்டி இடுகின்றார். தமிழகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்ய இன்னும் நான்கு நாட்களே இருக்கும் நிலையில் எழுச்சி தமிழர் திரு மனுதாக்கல் செய்வார் என்ற எதிர்பார்ப்பு தொகுதி மக்களிடமும் கட்சி தொண்டர்களிடமும் நிலவுகிறது .இந்த நிலையில் ,இன்று வாண்டையார் அவர்களை சந்தித்து திருமாவளவன் அதரவு கோரினார்..வாண்டையார் ஏற்கனவே தி.மு.க கூட்டனிக்கு அதரவு தெரிவித்த நிலையில் இன்று திருமாவளவன் அவர்கள் சந்தித்ததின் விளைவாக அனைத்து மூவேந்தர் வாண்டையார் சமூகத்தினரும் சிதம்பரம் தொகுதியில் திருமாவளவன் வெற்றிக்கு பாடுபடுவார்கள் என்று தெரிகிறது.மூவேந்தர் வாண்டையார்கள் சிதம்பரம் தொகுதியில் கணிசமாக இருப்பதனால் திருமாவளவன் அவர்களின் வெற்றி உறுதியாகி
இன்று (22.04.09) செவ்வாய் கிழமை , அரியலூரில் வேட்புமனு தாக்கல் செய்வார்.மாலை அங்கு நடக்கும் பொது கூட்டத்தில் எழுச்சி உரையாற்றுகின்றார்...நாளை சென்னையில் பெரியார் திடலில் ஈழ தமிழர்களை பாதுக்காக கோரி பொது கூட்டமும் நடை பெறுகிறது ....

Friday, April 10, 2009

இல‌ங்கை‌யி‌ல் நட‌ந்து வரு‌ம் இன‌ப் படுகொலையை க‌ண்டி‌த்து ‌விடுதலை ‌சிறு‌த்தை‌க‌ள் க‌ட்‌சி சா‌ர்‌பி‌ல் செ‌ன்னை மெமோ‌ரிய‌ல் ஹா‌‌ல் அருகே ‌இ‌ன்று ஆ‌ர்‌ப்பா‌ட்ட‌ம் நடைபெ‌ற்றது.இ‌ந்த ஆ‌‌ர்‌ப்பா‌ட்ட‌த்‌தி‌ல் த‌மிழ‌ர் ‌‌நீ‌திக‌ட்‌சி தலைவ‌ர் சுப.த‌‌மிழர‌ச‌ன், க‌விஞ‌ர் அ‌றிவும‌‌தி, ‌விடுதலை ‌சிறு‌த்தைக‌ள் க‌ட்‌சி‌யி‌ன் மா‌நில, மாவ‌ட்ட ‌நி‌ர்வா‌கிக‌ள் கல‌ந்து கொ‌ண்டன‌ர்.இ‌ந்த ஆ‌ர்‌ப்பா‌ட்ட‌த்‌தி‌ற்கு தலைமை தா‌‌‌ங்‌கிய ‌விடுதலை ‌சிறு‌‌த்தைக‌ள் க‌ட்‌சி‌த் தலைவ‌ர் தொ‌ல்.‌திருமாவளவ‌ன் பேசுகை‌யி‌ல், இல‌ங்கை‌யி‌ல் ‌விடுதலை‌ப்பு‌‌லிக‌ள் ‌மீது‌ம் அ‌ப்பா‌வி த‌மிழ‌ர்க‌ள் ‌மீது‌ம் ‌சி‌ங்கள படை கொடூர‌த் தா‌க்குத‌ல் நட‌த்‌தி வரு‌கிறது. பு‌லிக‌ள் சரணடையா‌வி‌ட்டா‌ல் ஒ‌ட்டுமொ‌த்தமாக த‌மி‌ழ் இன‌த்தை அ‌ழி‌ப்பே‌ன் என அ‌ந்நா‌ட்டு அ‌திப‌ர் ராஜப‌‌க்சே கொ‌க்க‌‌ரி‌த்து‌ள்ளா‌‌ர். இதுபோ‌ன்று பேசுவத‌ற்கு அவ‌ன் யாரு‌க்கு‌ம் அ‌ஞ்ச‌வி‌ல்லை.‌இல‌‌ங்கை‌யி‌ல் மு‌ல்லை‌த்‌தீ‌வி‌ல் உ‌ள்ள பாதுகா‌ப்பு வளைய‌த்‌தி‌ற்கு உ‌ட்ப‌ட்ட பகு‌‌தி‌யி‌ல் 24 ‌கி.‌மீ சதுர அடி சு‌ற்றளவ‌ி‌ல் ப‌துங்க‌ி உ‌ள்ள அ‌ப்பா‌‌வி த‌மிழ‌‌‌ர்களை சி‌ங்கள அரசு ‌விஷவாயு கு‌ண்டுகளை ‌வீ‌சி அ‌‌‌‌ழி‌த்து வரு‌கிறது. ச‌மீப‌த்த‌ி‌ல் கூட 450 த‌மிழ‌ர்க‌‌ள் மொ‌த்தமாக ப‌லியா‌கியு‌ள்ளன‌ர்.இது போ‌ன்ற கொடூர‌ம் 2ஆ‌ம் உல‌‌கப்போ‌ரி‌ன் போது கூட நட‌ந்‌திராத கொடூர‌ம். எனவே இ‌ந்த ‌பிர‌ச்சனை‌யி‌ல் ம‌னித நேய அடி‌ப்படை‌யி‌ல் ம‌த்‌திய அரசு தலை‌யி‌ட்டு உடனடியாக நடவடி‌க்கை எடு‌க்கு‌ம்படி ‌விடுதலை ‌சிறு‌த்தைக‌ள் வலியுறு‌த்து‌கிறது.ஹ‌ீரோ‌சிமா, நாகசா‌கி‌ப் ஆ‌கிய இட‌ங்க‌ளி‌ல் ‌விஷவா‌யு கு‌ண்டுகளை ‌வீ‌சி தா‌க்‌கிய ச‌ம்ப‌வ‌த்தை உலக‌ம் இ‌ன்று‌‌ம் க‌ண்டி‌த்து வரு‌கிறது. அத‌ன் ‌பி‌ன்ன‌ர்தா‌ன் அணு ஆயுத தயா‌ரி‌ப்பு, அணுச‌க்‌தி ஒ‌ப்ப‌ந்த‌ம் போ‌ன்ற‌வ‌ற்‌றி‌ல் முறையான வரையறைக‌ள் தேவை என ‌வி‌திமுறைக‌ள் வகு‌க்க‌ப்ப‌ட்டன. ஆனா‌ல் அதுபோ‌ன்ற ஒரு தா‌க்குத‌ல் நட‌த்த ராஜப‌‌க்சே தயாரா‌கி வரு‌‌கிறா‌ர்.ச‌ர்வதேச நாடுக‌ள் தடை செ‌ய்து‌ள்ள ‌கிள‌‌‌ஸ்ட‌ர் பா‌ம் (கொ‌த்து‌க் கு‌ண்டுக‌ள்) ‌வீ‌சி தா‌க்குத‌ல் நட‌த்த ‌தி‌ட்‌ட‌மிட‌்டு‌ள்ளா‌ர். இதுபோ‌ன்ற தாக‌்குத‌ல் நட‌த்‌‌தினா‌ல் உட‌லி‌ல் காய‌ம் ஏ‌ற்படாது, ந‌ச்சு வா‌யு பர‌வி உட‌லி‌ல் பட‌ர்‌ந்து தோ‌‌ல் உ‌‌‌‌ரி‌ந்து ர‌த்த‌ வா‌‌ந்‌தி எடு‌த்து சாக நே‌ரிடு‌ம். இதுபோ‌ன்று ச‌‌மீப‌த்‌தி‌ல் நட‌த்‌திய தாக‌்குத‌லி‌ல்‌ வ‌ிடுதலை‌ப்பு‌லிக‌ள் இய‌க்க‌த்தை சே‌‌ர்‌ந்த ஏராளமான போரா‌ளிக‌ள் க‌ரி‌‌க்க‌ட்டையா‌கி உ‌‌யி‌ர் இழ‌ந்து‌ள்ளன‌ர். ஆனாலு‌ம் செ‌த்தாலு‌ம் ம‌க்களோடு ம‌க்களாக‌த்தா‌ன் சாவே‌ன், நா‌ன் செ‌‌த்தாலு‌ம் ஒரு‌பிடி சா‌ம்ப‌‌ல் கூட எ‌தி‌ரிக‌ளி‌ன் கை‌யி‌ல் ‌கிடை‌க்க கூடாது எ‌ன்று சபத‌ம் செ‌ய்து வா‌ழ்‌ந்து கொ‌ண்டிரு‌க்‌‌கிறா‌ர் ‌பிரபாகர‌ன்.இலங்கையில் சிங்களப் படையினரின் விஷவாயு குண்டுகள் தாக்குதல் காரணமாக விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனுக்கு ஆபத்து ஏற்படலாம் என்று, நேற்று அதிகாலையில் செய்தி கேட்டு கலங்கினேன். பிரபாகரனுக்கு பாதிப்பு என்றால், அதன் பின்னர் திருமாவளவன் வெற்றிப் பெற்றால் என்ன, வெற்றி பெறாவிட்டால் என்ன? தேர்தலில் வெற்றிப்பெற்று டெல்லி சென்றால் என்ன, செல்லாவிட்டால் என்ன? எந்த இனத்தை காப்பதற்காக நாடாளுமன்றம் செல்வதற்காக தேர்தலில் போட்டியிடுகிறோமோ, அந்த இனமே அழிந்துவிட்டால் அதன் பின்னர் டெல்லி சென்று என்ன பயன்?. இதனால், மக்களவை தேர்தலில் போட்டியிடுவதையே தவிர்த்துவிடலாம் என்ற முடிவுக்கு வந்தேன். இதுதொடர்பான நேற்றைய பத்திரிகையாளர் சந்திப்பையும் ரத்து செய்ய நினைத்தேன்.ஆனால் "அவசரப்பட்டு முடிவு எடுக்க வேண்டாம்" என்று ரவிக்குமார் எம்எல்ஏ, கெஞ்சினார். அதன் பின்னரே, எனது முடிவை மாற்றினேன். பின்னர், நேற்று மாலை முதல்வர் கருணாநிதியை சந்தித்து பேசினோம். அப்போதும், 'இலங்கைத் தமிழரின் கடைசி நம்பிக்கை நீங்கள் தான்' என்று முதல்வரிடம் சொன்னேன். விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் ஓர் மாவீரன் என்று முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தியே பாராட்டியுள்ளார். அப்படிப்பட்ட இலங்கை தமிழருக்காகத்தான் விடுதலைச் சிறுத்தைகள் தொடர்ந்து போராடி வருகிறது.ஆனால், தா.பாண்டியன் போன்றவர்கள், தாசில்தாராக மாறி எனக்கு சாதி சான்றிதழ் தரவேண்டிய அவசியமில்லை. எனக்கு சான்றிதழ் தரும் தகுதி மக்களை தவிர, யாருக்கும் கிடையாது. சர்க்கஸில் நடிப்பவர் அவர் தான்; நான் அல்ல. என்னைப் பற்றி பிரபாகரன் நன்கு அறிவார். தா. பாண்டியன் மீது நாங்கள் மிகுந்த மதிப்பும், மரியாதையும் வைத்துள்ளோம். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வளர்ச்சி பிடிக்காமல் அல்லது யாரோயோ திருப்திப்படுத்துவதற்காக தா.பாண்டியன் இவ்வாறு பேசியுள்ளார்.இலங்கை தமிழர் பிரச்சனையை மையமாக வைத்து ஓர் தனி அணி அமைத்து, அதில் சேரும்படி என்னை அழைத்து நான் மறுத்திருந்தால் என் மீது குற்றம் சொல்லுங்கள். ஆனால் இப்போது அந்த அருகதை யாருக்கும் இல்லை.இலங்கை தமிழர் பாதுக்காப்பு இயக்கத்தில் விடுதலைச் சிறுத்தைகள் சேர்ந்த பின்னர் தான் அந்த இயக்கத்துக்கே ஓர் மரியாதை கிடைத்தது, இல்லையெனில், அது ஓர் அதிமுகவின் பினாமி அமைப்பாகத்தான் இருந்திருக்கும்.திமுக கூட்டணியில் இருந்தபோதும், இலங்கை தமிழர் பிரச்சனைக்காக, திமுகவுக்கு எதிரான இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கத்தில் சேர்ந்து செயல்பட்டேன், அதனால், முதல்வர் கருணாநிதிக்கு சங்கடம் நேர்ந்தபோது, நான் கூட்டணியில் இருக்கிறேனா, இல்லையா என்பதே நீங்களே முடிவு செய்யுங்கள் என்று முதல்வரிடம் கூறினேன். என்றாலும், 'விடுதலைச் சிறுத்தைகளுடனான கூட்டணி, தேர்தல் கூட்டணி அல்ல; அது ஓர் கொள்கை கூட்டணி' என்று அவர் அறிவித்த பின்னர் தான் தொடர்ந்து அதிலேயே நீடிப்பது என நாங்கள் முடிவு செய்து பணியாற்றி வருகிறோம். இல்லையெனில், இந்த தேர்தலை தனித்தே சந்தித்திருப்போம்.எந்த அணியில் இருந்தாலும் இலங்கை தமிழருக்காக உண்மையாகவும், உறுதியாகவும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தொடர்ந்து போராடும். இலங்கை தமிழர்களை பாதுகாக்க, காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி மனிதாபிமானத்துடனும், தாயுள்ளத்துடனும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.எந்த அணியில் இருந்தாலும் ஈழத் தமிழருக்காக உண்மையாகவும், உறுதியாகவும் விடுதலைச் சிறுத்தைகள் தொடர்ந்து போராடும் என்று அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

Wednesday, April 8, 2009

ஈழத்தமிழர்களை பாதுகாக்க தமிழர்களின் கடைசி நம்பிக்கை காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்திதான் என்று கூறியுள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், சோனியாகாந்தி நினைத்தால் அடுத்த 24 மணி நேரத்திற்குள் இலங்கை அதிபர் ராஜபக்சேவை டெல்லிக்கு வரவழைத்து, போர் நிறுத்த நடவடிக்கைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த முடியும் என்றார்.
மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியல் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தேர்தல் அறிக்கை ஆகியவற்றை வெளியிட்டு, அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் செய்தியாளர்களிடம் பேசியதாவது:
முல்லைத்தீவில் நச்சு புகைக்குண்டுகளை வீசி அப்பாவித் தமிழர்களை சிங்கள இனவெறி அரசு கொன்று குவித்து வருகிறது. சிங்களப் படையின் 58 மற்றும் 59வது படைப்பிரிவு புலிகளால் அழிக்கப்பட்டுள்ளது. அந்த படை பிரிவில் இந்திய படையினரும் களமிறங்கி மக்களை அழித்தொழிக்கும் பணியில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன.
ஈழத்தமிழர்கள் மீது நச்சு புகைக்குண்டுகளை வீசி அழித்தொழிக்கும் கொடுமை, 2வது உலகப்போரில் கூட நடக்காத ஓர் கொடூரம் ஆகும். இதை சர்வதேச சமூகம் வேடிக்கை பார்த்துகொண்டிருப்பதை சகிக்க முடியாது.
இந்த பிரச்சனையை மனிதாபிமான அடிப்படையிலும் தாயுள்ளத்தோடும் காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி அணுகவேண்டும். அவர் நினைத்தால் சிங்கள அரசை கட்டுப்படுத்த முடியும். அவரது தலைமையிலான கூட்டணியில் இடம் பெற்றுள்ள முறையில் தோழமை உணர்வுடன் அவர்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறோம். ஈழத் தமிழர்களை பாதுகாக்க தமிழர்களின் கடைசி நம்பிக்கை சோனியாகாந்திதான் என வெளிப்படையாக அறிவிக்கிறோம்.
முதல்வர் கருணாநிதியும் போர் நிறுத்தம் செய்வதற்காக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கேட்டுக்கொள்கிறது.
சோனியா காந்தி நினைத்தால் அடுத்த 24 மணி நேரத்தில் இலங்கை அதிபர் ராஜபக்சேவை டெல்லிக்கு வரவழைத்து, போர் நிறுத்த பேச்சு வார்த்தைகள் நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்யமுடியும். எனவே எங்கள் இனத்தை காப்பாற்றுவதற்காக சோனியாவிடம் மடிப்பிச்சை கேட்கிறோம். இவ்வாறு அவர் பேசினார்.


விடுதலை சிறுத்தைகள் வேட்பாளர்கள் அறிவிப்பு
தி.மு.க. கூ‌ட்ட‌ணி சா‌ர்‌பி‌ல் ம‌க்களவை‌த் தே‌ர்த‌லி‌ல் போ‌ட்டி‌யிடு‌ம் ‌விடுதலை ‌சிறு‌த்தைக‌ள் க‌ட்‌சி‌யி‌ன் வே‌ட்பாள‌ர்களை அ‌க்க‌ட்‌சி‌யி‌ன் தலைவ‌ர் தொ‌ல்.‌திருமாவள‌வ‌ன் இ‌ன்று அ‌றி‌வி‌த்தா‌ர்.‌‌சித‌ம்ப‌த்த‌ி‌ல் ‌திருமாவளவனு‌ம்,விழு‌ப்புர‌த்த‌ி‌ல்எ‌ஸ்.‌பி.வேலாயுதமு‌ம் போ‌ட்டி‌யிடு‌கி‌ன்றன‌ர்.மக்களவை தேர்தலில் ‌தி.மு.க. கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைக‌ள் க‌ட்‌சிகளுக்கு ‌சித‌ம்பர‌ம், ‌விழு‌ப்புர‌ம் ஆ‌கிய இர‌ண்டு தொகு‌திகளை முதலமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தி ஒதுக்‌கினா‌ர்.இ‌ந்த இரண்டு தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை இன்று அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் அறிவித்தார். அத‌ன்படி சிதம்பர‌‌ம் தனி தொகு‌தி‌யி‌ல் தொல்.திருமாவளவனு‌ம், விழுப்புர‌‌ம் தனி தொகு‌தி‌யி‌ல் எஸ்.பி.வேலாயுதமு‌ம் போ‌ட்டி‌யிடு‌கி‌ன்றன‌ர்.இதை‌த் தொட‌‌ர்‌ந்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தேர்தல் அறிக்கையும் ‌திருமாவளவ‌ன் வெ‌‌ளி‌யி‌ட்டா‌ர்.பி‌ன்ன‌ர் செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம் பே‌சிய ‌திருமாவளவ‌ன், 40 தொகு‌தி‌‌க‌ளி‌ல் எ‌‌ங்க‌ள் கூ‌ட்ட‌ணி மாபெரு‌ம் வெ‌ற்‌றி பெறு‌ம் எ‌ன்றா‌ர்.மேலு‌ம், த‌மிழக உ‌ரிமைகளை ‌மீ‌ட்போ‌ம், த‌மி‌‌‌‌ழின ந‌ல‌ன்களை கா‌ப்போ‌ம் எ‌ன்ற கோஷ‌‌த்தை மு‌ன்வை‌த்து தே‌‌ர்த‌ல் ‌பிரசார‌த்த‌ி‌‌ல் ஈடுபடுவோ‌ம் எ‌ன்றா‌ர்.சித‌ம்பர‌‌ம் தொகு‌தி‌யி‌ல் 2 முறை போ‌ட்டி‌யி‌ட்டு தோ‌ல்‌வி அடை‌ந்த ‌திருமாவளவ‌ன் த‌ற்போது 3வது முறையாக போ‌ட்டி‌யிடு‌கிறா‌ர்.ம‌ற்றொரு வே‌ட்பாளரான வேலாயுத‌ம், செ‌ன்னை மடி‌ப்பா‌க்க‌த்தை சே‌ர்‌ந்த ‌பிரபல தொ‌‌‌ழில‌திப‌ர் ஆவா‌ர்.

Tuesday, April 7, 2009


தேர்தல் ஆலோசனை: கருணாநிதியை சந்தித்தார் திருமாவளவன்
சென்னை (ஏஜென்சி), செவ்வாய்கிழமை, 7 ஏப்ரல் 2009 ( 13:04 IST )
விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், முதல்வர் கருணாநிதியை சந்தித்து தேர்தல் பிரச்சாரம் செய்வது குறித்து ஆலோசனை நடத்தினார்.விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், முதல்வர் கருணாநிதியை சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று மாலை சந்தித்துப் பேசினார். அவருடன் விடுதலை சிறுத்தைகள் கட்சி பொதுச் செயலாளர் சிந்தனை செல்வன், ரவிக்குமார் எம்.எல்.ஏ., தலைமை நிலைய செயலாளர் வன்னியரசு ஆகியோர் வந்திருந்தனர்.இந்த சந்திப்பு 30 நிமிடங்கள் நடந்தது.இந்த சந்திப்பின் போது, அமைச்சர்கள் க.அன்பழகன், மு.க.ஸ்டாலின், ஆற்காடு வீராசாமி, வீரபாண்டி ஆறுமுகம் ஆகியோரும் உடனிருந்தனர்.முதல்வர் கருணாநிதியை சந்தித்துவிட்டு வெளியே வந்த திருமாவளவன் செய்தியாளர்களிடம் கூறுகையில், "மக்களவை தேர்தலில் போட்டியிடும் தோழமை கட்சி வேட்பாளர்களை ஆதரித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தமிழகம் முழுவதும் பிரசாரம் செய்கிறது. இதுதொடர்பாக முதல்வர் கருணாநிதியை சந்தித்து பேசினேன்" என்றார்."தேர்தல் பிரசாரத்தின்போது, மத்திய, மாநில அரசுகளின் சாதனைகளை விளக்கியும், மாநில உரிமை, நதிநீர் இணைப்பு, ஈழத்தமிழர் பிரச்சினை ஆகியவற்றை மக்கள் முன்பு வைத்து பிரசாரம் செய்வோம்"என்றும் அவர் கூறினார்."விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தேர்தல் அறிக்கை 8ம் தேதி (நாளை) காலை 10 மணிக்கு வெளியிடப்படும்.அப்போது, விழுப்புரம், சிதம்பரம் ஆகிய தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களும் அறிவிக்கப்படுவார்கள்" என்று கூறிய திருமாவளவன் வரும் 10 ம் தேதி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் செயல் வீரர்கள் கூட்டம் நடைபெறும் என்றும் தெரிவித்தார்.

Thursday, April 2, 2009

01.04.09 அன்று விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் மாநில மாவட்ட செயற்குழு கூட்டம் வேளச்சேரியிலுள்ள தாய்மண் அரங்கத்தில் நடைப்பெற்றது. எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தல் - 2009 க்கான தேர்தலில் எவ்வாறு களப்பணி ஆற்றவேண்டும் என்பது குறித்து விவாதிக்கப்பட்டது. பின்னர் நிறைவாகப் பேசிய விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் அவர்கள் பேசியதாவது, சிதம்பரம் மற்றும் விழுப்புரம் ஆகியத்தொகுதிகளில் விடுதலைச்சிறுத்தைகள் மிகப்பெரும்பான்மையான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறும் என்றும், தலைவர் கலைஞர் அவர்கள் தலைமையில் அமைந்துள்ள இந்த மகத்தான கூட்டணியானது 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்றும் தெரிவித்தார்.

கூட்டணியின் வெற்றிக்காக கட்சி தோழர்கள் கடுமையான களப்பணியாற்றிட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். அணுகுமுறை பிரச்சனை மற்றும் கொள்கை அடிப்படையிலான பிரச்சனை ஆகிய காரணங்களை முன்னிறுத்தியே அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைக்க தாம் விரும்பவில்லை என்பதையும் தெரிவித்தார். ஈழப்பிரச்சனை விவகாரத்தில் இயக்குனர் சீமான், கொளத்துார் மணி உள்ளிட்டவர்கள் கைது செய்யப்பட்டபோது விடுதலைச்சிறுத்தைகள் கட்சி தமது கண்டனத்தை பதிவு செய்தது. ஆனால் தமிழ் தேசியம் பேசுகின்ற பலர் விடுதலைச்சிறுத்தைகள் அவ்வாறு கைது செய்யப்பட்ட போது அதை கண்டிக்கவில்லை என்றும் குற்றம் சாட்டினார்.

மேலும் விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளர்கள் பெயர்களை 03,04,09 அன்று அறிவிப்பு செய்வதாக கூறினார். புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்தநாளில் விடுதலைச்சிறுத்தைகள் கட்சி சார்பில் ஒவ்வொரு ஆண்டும் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றது, இந்த ஆண்டு 14,04,09 அன்று சென்னை மயிலை மாங்கொள்ளையிலுள்ள திடலில் விருதுகள் வழங்கும் விழா நடைபெற இருக்கின்றது. தலைவர் தொல்,திருமாவளவன் அவர்கள் இந்த ஆண்டுக்கான விருதுகள் பெறுவோர் பெயர்களை கீழ்கண்டவாறு அறிவிப்புச் செய்தார். 1. அம்பேத்கர் சுடர் விருது - பாவலர் அறிவுமதி 2. அயோத்திதாசர் ஆதவன் விருது - அன்பு பொன்னோவியம் ( இறந்தவர் ) 3. பெரியார் ஓளி - பேராசிரியர் சுப.வீரபாண்டியன் 4. காமராசர் கதிர் - தமிழருவி மணியன் 5. காயிதே மில்லத் - குன்னக்குடி ஹனிபா 6. செம்மொழி ஞாயிறு - பாவலரேறு பெருஞ்சித்தரனார்.( இறந்தவர் ) ஓவ்வொரு பெயர் அறிவிக்கப்படும் பொழுதும் திரளாக கூடியிருந்த விடுதலைச்சிறுத்தைகள் பெரும் கரவொலி எழுப்பி வரவேற்றனர்.

Tuesday, March 31, 2009


விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர்கள் நாளை அ‌றி‌வி‌ப்பு
செ‌ன்னை (ஏஜென்சி), 31 மார்ச் 2009 ( 12:08 IST )
பாராளுமன்ற தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் சார்பில் போட்டியிடும் 2 வேட்பாளர்கள் பெய‌ர் நாளை அ‌‌றி‌வி‌க்க‌ப்படு‌‌ம் எ‌ன்று அ‌க்க‌ட்‌சி தலைவ‌ர் தொல்.திருமாவளவன் தெ‌ரி‌வி‌த்தா‌ர்.தமிழக‌த்த‌ி‌ல் தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் உ‌ள்ள விடுதலை சிறுத்தைகள் க‌ட்‌சிகளு‌க்கு ‌சித‌ம்பர‌ம், ‌விழு‌ப்புர‌ம் ஆ‌கிய த‌னி‌த் தொகு‌திகளை ‌தி.மு.க. தலைவ‌ர் கருணா‌நி‌தி ஒது‌க்‌‌கினா‌ர்.இதனைத் தொடர்ந்து, விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன் முதலமைச்சர் கருணாநிதியை, கோபாலபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று மாலை சந்தித்துப் பேசினார்.அப்போது, விழுப்புரம் தனித்தொகுதிக்கு பதிலாக, கள்ளக்குறிச்சி பொதுத் தொகுதியை விடுதலை சிறுத்தைகளுக்கு ஒதுக்கித்தர வேண்டும் என்று கேட்டதாக தெரிகிறது.இ‌ந்த ச‌ந்‌தி‌ப்‌பி‌ன் போது அமைச்சர்கள் மு.க.ஸ்டாலின், துரைமுருகன், எ.வ.வேலு ஆகியோரும், விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில், அக்கட்சியின் பொதுச் செயல‌ர்கள் சிந்தனை செல்வன், ரவிக்குமார், தலைமை நிலைய செயலர்கள் பாவரசு, வன்னியரசு, தனிச் செயலர் பாவலன், செய்தி தொடர்பாளர் ஆர்வலன் ஆகியோரும் உடன் இருந்தனர்.
பின்னர், வெளியே வந்த திருமாவளவ‌னிட‌ம், முதலமைச்சர் கருணாநிதியை சந்தித்ததன் நோக்கம் என்ன? எ‌ன்று கே‌ட்டன‌ர்.இத‌ற்கு ப‌தி‌ல் அவ‌ர், ‌தி.மு.க. தலைமையிலான ஜனநாயக முற்போக்கு கூட்டணியில் உள்ள எங்களுக்கு சிதம்பரம், விழுப்புரம் ஆகிய தொகுதிகளை ஒதுக்கியுள்ளார்கள். இந்த 2 தொகுதிகளிலும் யாரை போட்டியிட வைப்பது என்பது குறித்து முடிவு செய்ய, எங்கள் கட்சியின் தலைமை நிர்வாகிகள் கூட்டம் ஏப்ரல் 1 ‌ம் தேதி சென்னையில் கூடுகிறது. கூட்டத்தில், வேட்பாளர்கள் யார்? என்பது குறித்தும், எந்த சின்னத்தில் போட்டியிடுவது என்பது குறித்தும் விவாதித்து முடிவு செய்யப்படும் எ‌ன்றா‌ர்.விழுப்புரம் தனித் தொகுதிக்கு பதிலாக, கள்ளக்குறிச்சி பொதுத் தொகுதியை மாற்றித்தர கேட்டதாக கூறப்படுகிறதே? எ‌ன்று கே‌ட்டத‌ற்கு, தொகுதி ஒதுக்கீடு செய்வதற்கு முன்னதாக, நாங்கள் கள்ளக்குறிச்சி தொகுதியை கேட்டோம். ஆனால், தற்போது சிதம்பரம், விழுப்புரம் ஆகிய தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.தொகுதி ஒதுக்கீட்டை பொறுத்தவரை எங்களுக்கு திருப்திதான் எ‌ன்றா‌ர் ‌திருமாவளவ‌ன்.

இளையராஜா


விடுதலை சிறுத்தைகள் வேட்பாளர் - திருமா

விடுதலை சிறுத்தைகளுக்கு இரண்டு தொகுதிகள் நேற்று அறிவிக்கபட்ட நிலையில் .கூட்டணி உடன்பாடு இன்று கையெழுத்தானது இதனை அடுத்து இந்த இரண்டு தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்கள் பற்றிய எதிர்பார்ப்பு கட்சியினர்யிடையில் நிலவுகிறது..வேட்பாளர்கள் தேர்வு குறித்த முடிவுகள் புதன் கிழமை (01-04-2009) அன்று நடைபெறுகின்ற கட்சியின் பொதுகுழுவில் முடிவு செய்யபடும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் அறிவிப்பு செய்துள்ளார்.21-03-2009 அன்று நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் தலைவர் திருமாவளவன் அவர்கள் இந்த தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றபட்ட நிலையில் புதன் கிழமை நடைபெரும் கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகின்றது..

Friday, January 2, 2009

THOL.THIRUMAVALAVAN

நேற்று (28.03.2009) இரண்டு தொகுதிகள் விடுதலை சிறுத்தைகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக முதல்வர் கருணாநிதி அறிவித்திருந்தார் மேலும் எந்த எந்த தொகுதிகளில் போட்டி என்பதை ஓரிரு நாட்களில் அறிவிப்பதாக சொல்லி இருந்தார்...
இதற்கிடையில் ,தேர்தல் உடன்பாடுகள் குறித்த பேச்சுவார்த்தைகள் முடிவுக்கு வந்ததை அடுத்து
மக்களவை தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் போட்டியிடும் தொகுதிகள் அறிவிக்கபட்டுள்ளன
1.விழுப்புரம் (தனி)
2.சிதம்பரம்(தனி)
இந்த இரண்டு தொகுதிகளும் தனித்தொகுதிகள்