விடுதலை சிறுத்தைகள் வேட்பாளர்கள் அறிவிப்பு
தி.மு.க. கூட்டணி சார்பில் மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளர்களை அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் இன்று அறிவித்தார்.சிதம்பத்தில் திருமாவளவனும்,விழுப்புரத்தில்எஸ்.பி.வேலாயுதமும் போட்டியிடுகின்றனர்.மக்களவை தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சிகளுக்கு சிதம்பரம், விழுப்புரம் ஆகிய இரண்டு தொகுதிகளை முதலமைச்சர் கருணாநிதி ஒதுக்கினார்.இந்த இரண்டு தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை இன்று அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் அறிவித்தார். அதன்படி சிதம்பரம் தனி தொகுதியில் தொல்.திருமாவளவனும், விழுப்புரம் தனி தொகுதியில் எஸ்.பி.வேலாயுதமும் போட்டியிடுகின்றனர்.இதைத் தொடர்ந்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தேர்தல் அறிக்கையும் திருமாவளவன் வெளியிட்டார்.பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், 40 தொகுதிகளில் எங்கள் கூட்டணி மாபெரும் வெற்றி பெறும் என்றார்.மேலும், தமிழக உரிமைகளை மீட்போம், தமிழின நலன்களை காப்போம் என்ற கோஷத்தை முன்வைத்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவோம் என்றார்.சிதம்பரம் தொகுதியில் 2 முறை போட்டியிட்டு தோல்வி அடைந்த திருமாவளவன் தற்போது 3வது முறையாக போட்டியிடுகிறார்.மற்றொரு வேட்பாளரான வேலாயுதம், சென்னை மடிப்பாக்கத்தை சேர்ந்த பிரபல தொழிலதிபர் ஆவார்.
No comments:
Post a Comment