Thursday, April 2, 2009

01.04.09 அன்று விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் மாநில மாவட்ட செயற்குழு கூட்டம் வேளச்சேரியிலுள்ள தாய்மண் அரங்கத்தில் நடைப்பெற்றது. எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தல் - 2009 க்கான தேர்தலில் எவ்வாறு களப்பணி ஆற்றவேண்டும் என்பது குறித்து விவாதிக்கப்பட்டது. பின்னர் நிறைவாகப் பேசிய விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் அவர்கள் பேசியதாவது, சிதம்பரம் மற்றும் விழுப்புரம் ஆகியத்தொகுதிகளில் விடுதலைச்சிறுத்தைகள் மிகப்பெரும்பான்மையான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறும் என்றும், தலைவர் கலைஞர் அவர்கள் தலைமையில் அமைந்துள்ள இந்த மகத்தான கூட்டணியானது 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்றும் தெரிவித்தார்.

கூட்டணியின் வெற்றிக்காக கட்சி தோழர்கள் கடுமையான களப்பணியாற்றிட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். அணுகுமுறை பிரச்சனை மற்றும் கொள்கை அடிப்படையிலான பிரச்சனை ஆகிய காரணங்களை முன்னிறுத்தியே அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைக்க தாம் விரும்பவில்லை என்பதையும் தெரிவித்தார். ஈழப்பிரச்சனை விவகாரத்தில் இயக்குனர் சீமான், கொளத்துார் மணி உள்ளிட்டவர்கள் கைது செய்யப்பட்டபோது விடுதலைச்சிறுத்தைகள் கட்சி தமது கண்டனத்தை பதிவு செய்தது. ஆனால் தமிழ் தேசியம் பேசுகின்ற பலர் விடுதலைச்சிறுத்தைகள் அவ்வாறு கைது செய்யப்பட்ட போது அதை கண்டிக்கவில்லை என்றும் குற்றம் சாட்டினார்.

மேலும் விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளர்கள் பெயர்களை 03,04,09 அன்று அறிவிப்பு செய்வதாக கூறினார். புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்தநாளில் விடுதலைச்சிறுத்தைகள் கட்சி சார்பில் ஒவ்வொரு ஆண்டும் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றது, இந்த ஆண்டு 14,04,09 அன்று சென்னை மயிலை மாங்கொள்ளையிலுள்ள திடலில் விருதுகள் வழங்கும் விழா நடைபெற இருக்கின்றது. தலைவர் தொல்,திருமாவளவன் அவர்கள் இந்த ஆண்டுக்கான விருதுகள் பெறுவோர் பெயர்களை கீழ்கண்டவாறு அறிவிப்புச் செய்தார். 1. அம்பேத்கர் சுடர் விருது - பாவலர் அறிவுமதி 2. அயோத்திதாசர் ஆதவன் விருது - அன்பு பொன்னோவியம் ( இறந்தவர் ) 3. பெரியார் ஓளி - பேராசிரியர் சுப.வீரபாண்டியன் 4. காமராசர் கதிர் - தமிழருவி மணியன் 5. காயிதே மில்லத் - குன்னக்குடி ஹனிபா 6. செம்மொழி ஞாயிறு - பாவலரேறு பெருஞ்சித்தரனார்.( இறந்தவர் ) ஓவ்வொரு பெயர் அறிவிக்கப்படும் பொழுதும் திரளாக கூடியிருந்த விடுதலைச்சிறுத்தைகள் பெரும் கரவொலி எழுப்பி வரவேற்றனர்.

No comments:

Post a Comment