Tuesday, April 7, 2009


தேர்தல் ஆலோசனை: கருணாநிதியை சந்தித்தார் திருமாவளவன்
சென்னை (ஏஜென்சி), செவ்வாய்கிழமை, 7 ஏப்ரல் 2009 ( 13:04 IST )
விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், முதல்வர் கருணாநிதியை சந்தித்து தேர்தல் பிரச்சாரம் செய்வது குறித்து ஆலோசனை நடத்தினார்.விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், முதல்வர் கருணாநிதியை சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று மாலை சந்தித்துப் பேசினார். அவருடன் விடுதலை சிறுத்தைகள் கட்சி பொதுச் செயலாளர் சிந்தனை செல்வன், ரவிக்குமார் எம்.எல்.ஏ., தலைமை நிலைய செயலாளர் வன்னியரசு ஆகியோர் வந்திருந்தனர்.இந்த சந்திப்பு 30 நிமிடங்கள் நடந்தது.இந்த சந்திப்பின் போது, அமைச்சர்கள் க.அன்பழகன், மு.க.ஸ்டாலின், ஆற்காடு வீராசாமி, வீரபாண்டி ஆறுமுகம் ஆகியோரும் உடனிருந்தனர்.முதல்வர் கருணாநிதியை சந்தித்துவிட்டு வெளியே வந்த திருமாவளவன் செய்தியாளர்களிடம் கூறுகையில், "மக்களவை தேர்தலில் போட்டியிடும் தோழமை கட்சி வேட்பாளர்களை ஆதரித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தமிழகம் முழுவதும் பிரசாரம் செய்கிறது. இதுதொடர்பாக முதல்வர் கருணாநிதியை சந்தித்து பேசினேன்" என்றார்."தேர்தல் பிரசாரத்தின்போது, மத்திய, மாநில அரசுகளின் சாதனைகளை விளக்கியும், மாநில உரிமை, நதிநீர் இணைப்பு, ஈழத்தமிழர் பிரச்சினை ஆகியவற்றை மக்கள் முன்பு வைத்து பிரசாரம் செய்வோம்"என்றும் அவர் கூறினார்."விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தேர்தல் அறிக்கை 8ம் தேதி (நாளை) காலை 10 மணிக்கு வெளியிடப்படும்.அப்போது, விழுப்புரம், சிதம்பரம் ஆகிய தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களும் அறிவிக்கப்படுவார்கள்" என்று கூறிய திருமாவளவன் வரும் 10 ம் தேதி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் செயல் வீரர்கள் கூட்டம் நடைபெறும் என்றும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment