Wednesday, April 22, 2009

திருமாவளவன் வேட்புமனுத் தாக்கல் !


திருமாவளவன் வேட்புமனுத் தாக்கல் !
அரியலூர்
விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.திமுக தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றுள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, சிதம்பரம் மற்றும் விழுப்புரம் ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிடுகிறது.சிதம்பரம் தொகுதியில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் போட்டியிடும் கட்சியின் தலைவர் திருமாவளவன் இன்று காலை 11 மணியளவில் அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.அவருடன், அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம், சட்டமன்ற உறுப்பினர் ரவிக்குமார், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் முன்னணி நிர்வாகிகள், தி.மு.க நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உள்பட பலர் வந்திருந்தனர்.முன்னதாக, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகேயுள்ள அம்பேத்கர் சிலைக்கு திருமாவளவன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.பின்னர் செய்தியாளர்களிடம் திருமாவளவன் கூறுகையில், "ஈழத் தமிழர்கள் மீது பா.ம.க. நிறுவனர் ராமதாசுக்கு உண்மையிலேயே அக்கறை இருந்தால், நாடாளுமன்றத்தில் ஈழத்தமிழர் பிரச்சனையை பேசுவதற்கு சரியான நபர் பொன்னுசாமியா அல்லது திருமாவளவனா என்பதை யோசிக்க வேண்டும் என்று தமிழறிஞர்கள் விரும்புகின்றனர்" என்றார்.ஈழத்தமிழர் பிரச்சனைக்காக, திமுக தலைவர் கருணாநிதி அறிவித்துள்ள முழுஅடைப்புக்கு கட்சி வேறுபாடின்றி அனைத்து தரப்பினரும் ஓத்துழைப்பு தரவேண்டும் என்று கேட்டுக்கொண்ட அவர், ஈழத் தமிழர் பிரச்சனைக்காக நாளை தேர்தல் பிரச்சாரம் எதிலும் தான் கலந்து கொள்ளவில்லை என்றும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment